கிளிநொச்சி – முகமாலை பகுதியில் கடந்த 11 ஆம் திகதி மனித எச்சங்களும் வெடிபொருட்களும் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் இன்று (15) காலை கிளிநொச்சி மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி மற்றும் பளை காவல் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோரின் முன்னிலையில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
காவல்துறை விசேட அதிரடிப்படை, இராணுவம் மற்றும் தடயவியல் காவல்துறையினா் உள்ளிட்டோர் குறித்த அகழ்வுப் பணிகளை முன்னெடுத்துள்ளனர்.
கண்ணிவெடி அகற்றும் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகளின் போது இவை கண்டுபிடிக்கப்பட்ட றிலையில் குறித்த பகுதிக்கு நேற்று (14) சென்று மேற்பாா்வை செய்திருந்த ந்த கிளிநொச்சி நீதவான் எஸ். லெனின்குமார், அகழ்வுப் பணிகளை ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கியிருந்தாா் எள்பது குறிப்பிடத்தக்கது