185
யாழ்.மானிப்பாய் – நவாலி தேத்தா மரத்தடி வீதியில் உள்ள வீடொன்றுக்குள் நேற்றிரவு நுழைந்த வாள்வெட்டுக்குழு ரவுடிகள் தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளது.வீட்டின் கதவு, யன்னல்களை உடைத்தும், வாளால் வெட்டியும் அட்டகாசம் புரிந்ததுடன் வீட்டின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொழுத்தியுள்ளது.
இதனையடுத்து மானிப்பாய் காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Spread the love