215
யாழ்ப்பாணம் – நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் 43 மீனவர்களை கைது செய்துள்ள அதே வேளை 6 படகுகளையும் கைப்பற்றியுள்ளனர்.
பின்னர் கைது செய்யப்பட்ட மீனவர்களும் அவர்கள் பயணித்த படகுகளும் மயிலிட்டி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டது. இதனைத் தொடர்ந்து கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு இடைத்தங்கல் முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love