இந்துக்களுக்கான முதல் மயானம் தென் கிழக்கு இங்கிலாந்தில் உள்ள பக்கிங்ஹாம்ஷயர் பகுதியில் கட்டப்படவுள்ளது. பிரித்தானியாவில் பிற மதத்தினருக்கு இருப்பது போன்று இந்துக்களுக்கும் தனி மயானம் வேண்டும் என பிரித்தானிய வாழ் இந்துக்களால் அனுபம் மிஷன் என்ற தொண்டு நிறுவனத்தின் மூலம் பிரித்தானிய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த கோரிக்கை நீண்ட நாட்களாக ஏற்றுக்கொள்ளப்படாமல் இருந்த நிலையில், தற்போது பிரித்தானிய திட்ட ஆய்வாளர் அலுவலகம் அனுமதி வழங்கியுள்ளது.
இதையடுத்து பக்கிங்ஹாம்ஷயரில் உள்ள ஸ்வாமி நாராயணன் கோயிலுக்கு அருகில் 15 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த மயானம் அமையவுள்ளது. தகனம், ஈமச்சடங்கு என ஒவ்வொரு சடங்கிற்கும் ஏற்றவகையில் தனித்தனி பகுதிகள் கொண்டு அமைக்கப்படவுள்ள இந்த மயானத்தில் இறுதி சடங்கில், சுமார் 500 பேர் வரை கலந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.