யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த உள்ளூராட்சி சபை பெண் பிரதிநிதிகளின் திறன்களை விருத்தி செய்வது தொடர்பான கலந்துரையாடலொன்று இன்றைய தினம் யாழிலுள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றது.
மகளிர் அபிவிருத்தி நிலையத்தால் ஒழுங்கமைக்கப்பட்டு சேர்ச் போ கொமண்ட் கிரவுண்ட் நிறுவனம் அனுசரணையுடன் கற்றல் மற்றும் தலைமைத்துவத்தில் பெண்கள் எனும் நிகழ்ச்சித்திட்டத்தின் நான்காவது அமர்வாக இது இடம்பெற்றது.
“உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல் முறைமைகளில் பெண்களின் பங்களிப்பு மற்றும் உள்ளுராட்சி மன்றங்களில் கொண்டுவரவேண்டிய மேம்பாடுகள்” எனும் தொனிப்பொருளில் நடந்த கலந்துரையாடலின் போது யாழ். மாவட்ட பிரதி தேர்தல் ஆணையாளர் அமல்ராஜ் உட்பட பல்வேறு துறை சார்ந்த நிபுணர்கள் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டு கருத்துக்களை பகிர்ந்திருந்தனர்.