இலங்கை பிரதான செய்திகள்

இலங்கையில் சமூக அறிவியல் துறை நிறுவப்பட்டு 100 வருடங்கள்

இலங்கையில் சமூக அறிவியல் துறை நிறுவப்பட்டு 100 ஆண்டுகள் ஆகின்ற நிலையில் , அது தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மொழியியல் மற்றும் ஆங்கிலத் துறை சிரேஷ்ட விரிவுரையாளர், சாமிநாதன் விமல் அவர்களை  , கொழும்பு பல்கலைக்கழக ஊடக கற்கைத் துறை விரிவுரையாளர் அனுஷா சிவலிங்கம் நேர்காணல் செய்திருந்தார். 

இலங்கையில் சமூக அறிவியல் துறை நிறுவப்பட்டு 100 வருடங்கள் ஆகின்றன.அந்நிலையில் அதன் ஆரம்ப நிலை தொடர்பில்?

தமிழில் கலைமாணி என்று அழைக்கப்படும் பல்கலைக்கழக பாடப் பரப்பில் இரு பிரதான பகுதிகளாக சமூக விஞ்ஞானமும் (Social Siences) மானிட கலைகளும் (Humanities) உள்ளடக்கின்றன. சில பல்கலைக்கழகங்களில் கலைப்பட்டத்தை வழங்கும் இளமாணி பட்டத்திற்கான பீடத்தை சமூக விஞ்ஞான மற்றும் மானிட கலைகள் என்று அழைக்கப்படுவதாக இருந்தாலும் அதிகளவிலான பல்கலைக்கழகங்களில் கலைப் பீடம் என்ற பெயரிலே இந்த பீடம் இயங்குகின்றது. இலங்கைப் பொறுத்தவரையில் சமகால பல்கலைக்கழகக் கல்வியில் அதிகமான மாணவர்களைக்கொண்ட பீடமாக இத்துறைகளைக்கொண்ட பீடம் உள்ளது.

  இலங்கை சூழ்நிலையில் இத்துறைகளை சார்ந்த வரலாறானது காலனித்துவக் காலப்பிரிவில் இலங்கையில் உயர் கல்விற்காக நிறுவனங்களை நிறுவப்பட்டதுடன் தொடர்புடையதாக உள்ளது. அந்தவகையில் முலாவதாக நிறுவப்பட்டது இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரி என்ற அழைக்கப்படும் (Ceylon University College) என்ற நிறுவனம் ஆகும். இது 1921ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இது லன்டன் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டதொன்றாக இருந்தது. ஆயினும் ஒரு முழுமையான நவீன பல்கலைக்கழகத்தின் தொடக்கம் 1942 இல் இலஙகைப் பல்கலைக்கழகம் (University of Ceylon) தாபிக்கப்படுவதுடன் காணலாம். 1942 ஆம் ஆண்டு யூலை மாதம் 01 ஆம் திகதியன்று இந்த தொடக்கம் நடந்தது. கொழும்பில் தாபிக்கப்பட்ட இது 1952 இல் பேராதெனியாவிற்கு இடப்பெயர்ந்தது. 1952 ஆம் ஆண்டு வரை பேராதெனியவில் இயங்கிய University of Ceylon 1972 இல் இலங்கைப் பல்கலைகக்கழகத்தின் (University of Sri Lanka) பேரதெனிய வளாகமாகியதுடன் (Peradeniya Campus, University of Sri Lanka)) நாட்டில் பல வளாகங்கள் அத்துடன் தொடங்கியதுடன் பின்பு அவை பல்கலைக்கழகங்களாக தரம் உயர்த்தப்பட்டது. இலங்கயின் நவீன பல்கலைக்கழகங்களின் சமூக விஞ்ஞான மற்றும் மானிட கலைகள் கற்கைகளின் வரலாறு இவ்வாறு தான் தொடங்குகின்றது.

2. பேராதனையில் ஆரம்பிக்கப்பட்ட இக்கல்வித்துறை எவ்வாறு ஏனைய பல்கலைக்கழகங்களுக்கு பரவியது?

  இலங்கையில் பல்கலைக்கழகக் கல்வி ஒரு பல்கலைகழகத்தில் இருந்து பல பல்கலைக்கழகங்களாக வளர்ச்சியடைந்ததுடன் மானிட கலைக் மற்றும் சமூக விஞ்ஞானமும் என்ற கற்கைப் புலம் அகன்றளவில் வளர்ச்சியடைந்தன. இதன்போது ஏற்கனவே பிரிவென என்ற பாம்பரியக் கல்விமுறையில் பிரபல்யமான நிறுவனங்களாக இருந்த வித்யோதய மற்றும் வித்யாலங்கார என்ற இரு நிறுவனங்கள் முறையே சிறி ஜயவர்த்தனப்புரப் பல்கலைக்கழகம், களணிப்பல்கலைக்கழகம் என்று பரினாமமடைந்தமையும் அத்துடன் யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம், ருஹூணுப் பல்கலைகக்கழகம் போன்றவகையில் இலங்கையில் பிராந்திய மட்டத்தில் பல்கலைககழக்கள் உருவாக்கப்பட்ட்மையும் அதற்குப் பின்பு கிழக்குப் பல்கலைக்கழகம் தென்கிழக்குப்பல்கலைக்கழகம், சபரகமுவ பல்கலைக்கழகம், வயம்ப பல்கலைக்கழகம், ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம், வவுனியா பல்கலைக்கழகம் என்றவகையில் இறுதியாக வவுனியா பல்கலைக்கழகம் என்று பிராந்திய மட்டத்தில் பல்கலைக்கழகங்கள் அமைக்கபட்டதும் மானிட கலைககள் மற்றும் சமூக விஞ்ஞானத்துறையை கற்கைப் புலங்களாக வளர்ச்சியடைய மேற்கொள்ளப்பட்டதாக கருதப்படுகின்றது.

3. தமிழ் மொழியும் சமூக அறிவியல் மற்றும் மானுடவியல் துறையிலும் இன்றைய நிலை என்ன?

        தற்போதைய சூழ்நிலையில் தமிழ் மொழியை கற்றல் ஊடகமாகக்கொண்டு இடம்பெறும் பாடநெறிகள் பெரும்பாலும் மானடகலைகள் மற்றும் சமூக விஞ்ஞானம் என்ற புலத்தை சார்ந்நததாக மட்டுமே உள்ளதுடன் அதிலும் சில பாடநெறிகள் ஆங்கில மொழியை ஊடகமாகக்கொண்டுள்ளன. தொழில் வாய்ப்பு என்ற விடயத்தை கருத்தில்கொண்டு அதிகமாகவே மாணவர்கள் சமூக விஞ்ஞானம் சாரந்த பாடநெறிகளை தெரிவுசெய்யப்படுவதையும் மானிட கலைகள் சார்ந்த பாடங்கள் கற்கின்ற மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துக்கொண்டு செல்லும் போக்கையும் தற்காலத்தில் அவதானிக்கக்கூடியதாக உள்ளது.  

4. இலங்கையில் சமூக அறிவியல் மற்றும் மானுடவியல் துறையின் இன்றைய நிலை?  

சில பல்கலைக்கழங்களில் இத்துறையின் கல்வி ஊடகம் ஆங்கில மொழியாக மாறிவருகின்றமையை அவதானிக்கலாம்.

5. ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கையில் இந்த துறையில் முன்னேற்றம் காண வேண்டிய பகுதிகள் எவை?

குறிப்பாக ஒரு தனி பாடப்பரப்பாக என்று இல்லாமல் பல பாடங்களின் ஒன்றிணைப்பைக் கொண்டதாக (interdiciplinory) இந்த கற்கைகள் மாறவேண்டியத் தேவையுள்ளது. அத்துடன் ஒப்பியல் இலக்கியம், பண்பாட்டு ஆய்வுகள், ஒப்பியல் சமயக்கற்கைள் போன்றவகையில் முன்னேற்றங்களைக்கொண்டதாகவும் பல்மொழி சூழலில் கற்றல் கற்பித்தல் மேற்கோள்ளக்கூடியதானதாகவும் அத்துடன் சர்வதேச மட்டத்து ஆய்வுகளை மேற்கொள்ளப்படுவதாகவும் மாறவேண்டியத் தேவையுள்ளது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.