175
யாழில் உண்ணி காய்ச்சல் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூன்று நாள்களின் பின் அவா் இன்று உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் கொட்டடியைச் சேர்ந்த செபஸ்ரியன் பெனடிக் ரொசாரி (வயது-63) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த 16ஆம் திகதி காலை உடல்நலக்குறைவு காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். எனினும் சிகிச்சை பயனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.அவரது உயிரிழப்புக்கு உண்ணி காய்ச்சலே காரணம் என மருத்துவ அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.
Spread the love