196
கிளிநொச்சி நகரப் பகுதியில் நேற்று இரவு விசமிகளால் வீடொன்றுக்கு தீ வைக்கப்பட்டதனால் பெறுமதியான சொத்துக்கள் எரிந்து நாசமாகி உள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி ஏ-9 வீதியின் நீதிமன்றத்துக்கு அண்மித்த பகுதியில் உள்ள வீடொன்றுக்கே இவ்வாறு விசமிகளால் தீ வைக்கப் பட்டுள்ளது.
வீட்டுப் பொருட்கள் முற்றுமுழுதாக எரிந்து நாசமாகியுள்ளதுடன் வீட்டில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சீமெந்து மற்றும் ஏனைய பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளது குறித்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
Spread the love