முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தின் தமிழ் இலக்கிய விழாவும் பிரதேச மலர் வெளியீட்டு விழாவும் இன்று(22-12-2021) நடைபெற்றுள்ளன வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் நிதி அனுசரணையுடன் மாந்தை கிழக்கு பிரதேச செயலகமும் கலாச்சார பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த தமிழ் இலக்கிய விழாவும் பிரதேச மலர் வெளியீட்டு விழாவும் இன்று பகல் 10 மணிக்கு மாந்தை கிழக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் செல்வி றஞசனா நவரட்னம் தலைமையில் நடைபெற்றது
நிகழ்வில் மாவட்ட அரச அதிபர் விமலநாதன் மற்றும் முதன்மை விருந்தினர்கள் சிறப்பு விருந்தினர் ஆகியோா் பிரதான நுழைவாயிலில் இருந்து விழா மண்டபத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு பிரதேச செயலாளர் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றன தொடர்ந்து பிரதேச மலர் வெளியீடும் நடைபெற்றது
இந்நிகழ்வில் பிரதேச செயலக பிரதேச செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்களின் கலைநிகழ்வுகள் வில்லிசை போன்ற கிராமிய கலைகளை வெளிப்படுத்தும் நிகழ்வுகள் என்பனவும் நடைபெற்றன இதில் மாந்தை கிழக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பிரதேச மக்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்
முல்லைத்தீவு மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய பிரதேசமாக காணப்படுகின்ற மாந்தை கிழக்கு பிரதேசத்தில் கடந்த சில ஆண்டுகளாக இவ்வாறான கலாச்சார விழா மற்றும் பாரம்பரிய பண்பாட்டு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது