182
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் மரம் வெட்டியவர் மீது மரம் விழுந்ததில், அவர் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பளை பகுதியை சேர்ந்த எட்வேட் மதிவண்ணன் (வயது 41) என்பவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த நபர் தெல்லிப்பளை பகுதியில் கூலிக்கு வேப்ப மரம் ஒன்றினை வெட்டிய போது அந்த மரம் அவர் மீதே சரிந்து விழுந்ததில் , அவர் மரத்தினுள் அகப்பட்டு படுகாயங்களுக்கு உள்ளானார்.
அதனை அடுத்து அவர் அங்கிருந்து மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
Spread the love