இலங்கை மத்திய வங்கியினால் கடந்த டிசம்பா் 29ம் திகதி 202 பில்லியன் ரூபா அச்சிடப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒக்டோபர் 14 ஆம் திகதியின் பின்னர் முதலாவதாக இவ்வாறு பணம் அச்சிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 825 பில்லியன் ரூபா அச்சிடப்பட்டுள்ளது.
இதேவேளை, நேற்று முன்தினம் இலங்கை மத்திய வங்கி 48.5 பில்லியன் ரூபா பெறுமதியான முறிகளை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்த போதிலும் அதில் 33.5 பில்லியன் பெறுமதியான முறிகளையே விற்பனை செய்ய முடிந்துள்ளது
வட்டி விகிதம் மற்றும் நாணய மாற்று விகிதத்தை தொடர்ந்தும் கட்டுப்படுத்துவதன் மூலம் நெருக்கடி மேலும் தீவிரமடைந்து வருவதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் கலாநிதி டபிள்யு ஏ விஜேவர்தன தெரிவித்துள்ளார்.