அவுஸ்திரேலியாவின் தலைநகர் கான்பராவில் அமைந்துள்ள பழைய நாடாளுமன்றக் கட்டிடத்துக்கு பூர்வகுடிகளின் ஆதரவாளர்களால் தீ வைக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த சம்பவத்தில் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தொிவிக்கப்பட்டுள்ளது
தற்போது அருங்காட்சியமாக இருக்கும் பழைய நாடாளுமன்றக் கட்டிடத்தில் தீ வைக்கப்பட்டபோது 20க்கும் மேற்பட்டோர் பணியில் இருந்ததாகவும் நிலைமையை உணர்ந்து ஊழியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டதால் உயிாிழப்புகள் தவிா்க்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
. நேற்று வியாழக்கிழமை இந்தக் கட்டிடத்திற்கு முன்பாக பூர்வகுடிகளின் ஆதரவாளர்கள் தங்களின் இறையாண்மைக் காக்க வேண்டும் எனக் கோாிக்கை விடுத்து போராட்டம் நடத்தத் திரண்டிருந்தனர். .கடந்த 15 நாட்களாகவே இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் நேற்று நடந்த போராட்டத்தில் பழைய நாடாளுமன்றக் கட்டிடத்துக்குப் போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனா்..
இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்அந்நாட்டுப் பிரதமர் ஸ்கொ ட் மாரிஸன் அவுஸ்திரேலியாவில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றதில்லை. எனவும் நாட்டின் ஜனநாயகத்தின் அடையாளச் சின்னம் மீது இப்படியான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை வருத்தமளிப்பதாகவும் தொிவித்துள்ளாா்.
நாடாளுமன்ற வளாகத்திற்கு முன்னர் டென்ட் தூதரகம் அமைத்து 50 ஆண்டுகள் ஆகியுள்ளதனை நினைவுகூரும் வகையிலேயே போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். இத்தனை ஆண்டுகள் ஆகியும் தங்களின் இறையான்மை உறுதிப்படுத்தப்படவில்லை என்பதே அவர்களின் கோாிக்கையாக உள்ளது. அவுஸ்திரேலிய பூர்வக்குடிகள் கார்ப்பரேட் சுரங்க நிறுவனங்களால் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது