எல்லைதாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்டு, சிறை வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் தடுப்புக்காவல் எதிா்வரும் ஜனவரி 13ம் திகதிவரை ல் நீடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 18ஆம் திகதி ராமேஸ்வரத்திலிருந்து மீன் பிடிக்க சென்ற 43 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் சிறையில் வைக்கப்பட்டுள்ளனா் .
இந்த வழக்கு ஊர்காவல் துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் புத்தாண்டு விடுமுறை காரணமாக இணைய வழியாக வழக்கை விசாரித்த நீதிபதி கஜநிதிபாலன், மீனவர்களின் தடுப்புக்காவலை எதிா்வரும் 13ம் திகதி வரை நீடித்து உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக கைது செய்யப்பட்ட மீனவர்கள் கடந்த 14 நாட்களாக சிறையில் தனிமைப்படுத்தப் பட்டிருந்தனர். இதனால், இலங்கை மீன்வளத் துறை அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தவில்லை என்பதனால் மீனவர்களிடம் விசாரணை செய்து, அறிக்கையுடன் எதிா்வரும் 13ம் திகதி மீண்டும் முன்னிலையாகுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து மீனவர்கள் அனைவரும் மீண்டும் யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.