மக்களின் பிரச்னைகளுக்கு உரிய தீர்வு காணாவிட்டால் தாம் பதவி விலகவும் தயார் என இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், “இப்போது எரிவாயு இல்லை, மக்கள் வரிசையில் நிற்கிறார்கள், எரிவாயு சிலின்டர் வெடிக்கிறது.”
“லிட்ரோ தலைவர் பிணையில் விடுவிக்கப்பட்டார். எரிவாயுவை மக்களுக்கு சரியான முறையில் வழங்க முடியாவிட்டால் பதவியை விட்டு விலகலாம்.”
“மக்கள் வீடுகளுக்கு தீ வைக்கிறார்கள்.. ஊடகங்களில் ஜனாதிபதி சிரிக்கிறார். இவ்வாறான தலைவர் பதவி விலக வேண்டும்.”
“சில நிறுவனங்களுக்கு பொறுப்பானவர்களை நியமிக்கவில்லை என்பதை நாங்கள் காண்கிறோம்.”
“பதவிகளுக்கு பயந்து பதவிகளை காக்க பாடுபடுபவர்கள் நாங்கள் அல்ல, பதவிகளை விட்டு விலக தயாராக உள்ளோம்.இது மக்கள் சார்பாக நாம் முன்வைக்கும் வேண்டுகோள்.”
“அவர்கள் செவிசாய்க்காவிட்டால், அவர்களுக்கு எதிராக மக்களுடன் கைகோர்த்து, அவர்களை வெளியேற்றும் வரை போராடுவோம்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.