185
எல்லைதாண்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் சிறைச்சாலைக்கு சென்று பார்வையிட்டார்.
இன்று மதியம் ஒரு மணியளவில் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு வந்த அமைச்சர் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களைப் பார்வையிட்டு அவர்களுடன் கலந்துரையாடினார்.
அவருடன் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளன பிரதிநிதிகளும் இணைத்திருந்தனர். இதன்போது புதுவருடத்தை முன்னிட்டு இந்திய மீனவர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அமைச்சரால் வழங்கி வைக்கப்பட்டது.
Spread the love