ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜயதாஸ ராஜபஸ, சீனத் தூதுவர் ஊடாக சீன ஜனாதிபதி – ஷி ஜின்பிங்கிற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் 45 விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. குறிப்பாக “தங்களுக்குக் கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே தற்போதைய அரசாங்கம் ஜனநாயக முறையில் கவிழ்க்கப்படும்” என அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
“கடந்த 15 வருடங்களில் வெளிநாடுகளுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகள் அனைத்தும் மீண்டுமொருமுறை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு ஊழல் மோசடிகளை ஒழிக்கும் ஒப்பந்தங்கள் அனைத்தும் ஒழிக்கப்படும்” என கலாநிதி விஜயதாஸ ராஜபஸ, சீன ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அடுத்த ஜனாதிபதித் தேர்தல் அல்லது பொதுத் தேர்தல் பொது வாக்கெடுப்பின் கீழ் நடத்தப்படும் அக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு பாதகம் என நிரூபிக்கப்பட்ட ஒப்பந்தங்களை மறுசீரமைப்பதற்கு அல்லது ரத்து செய்வதற்கு பொதுமக்களின் அதிகாரம் பயன்படுத்தப்படும் எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செலந்திவா முதலீட்டின் ஊடாக இலங்கையின் நிலத்தை சீனா அபகரிக்க முயற்சித்தால் உடனடியாக பதவி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அக்கடித்தில் விஜயதாஸ ராஜபக்ஸ வலியுறுத்தி உள்ளார்.