154
யாழ்ப்பாணம் தீவகம் பகுதியில் வளர்ப்பு மாடு முட்டி , படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மண்கும்பான் 4ஆம் வட்டாரத்தை சேர்ந்த, மண்கும்பான் பிள்ளையார் ஆலய காவலாளியான நல்லையா கணேஸ்வரன் (வயது 62) என்பவரே உயிரிழந்துள்ளார்.
கடந்த 29ஆம் திகதி பிள்ளையார் ஆலயத்திற்கு சொந்தமான மாட்டினை கட்ட முற்பட்ட போது , அவரை மாடு வயிற்றுப்பகுதியில் முட்டியதால் , மாட்டின் கொம்புகள் குத்தி படுகாயமடைந்திருந்தார்.
அதனை அடுத்து யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, 5 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
Spread the love