இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் கடந்த மாதம் 19 ஆம் திகதி கைது செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்கள் இன்றைய தினம் புதன்கிழமை (5) மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளின் பின்னர் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
குறித்த மீனவர்கள் தமது குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், மூன்று குற்றச்சாட்டுக்களுக்கும் ஒரு வருட சாதாரண சிறை தண்டனை வழங்கப்பட்டதோடு, குறித்த சிறை தண்டனை 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டு இலங்கைக்கான இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.என தொிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மீனவர்களில் சிறுவர் ஒருவர் உள்ளமையினால் நிபந்தனையின் அடிப்படையில் எச்சரிக்கப்பட்டு, அவா் தனது கல்வியை தொடர வேண்டும் என நீதவான் அறிவுறுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது