திருமறைக் கலாமன்றத்தின் நாடக அரங்கியலுக்கான சான்றிதழ் கற்கைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. திருமறைக் கலாமன்றத்தினால் , நடாத்தப்படும் நாடக அரங்கியலுக்கான சான்றிதழ் கற்கை நெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
நாடகக் கலையின் மேம்பாடு கருதி,செயல் முறை சார்ந்த தேர்ச்சியை மேம்படுத்தும் நோக்கோடு திருமறைக் கலாமன்றத்தின் நாடகப் பயிலகம் கடந்த 30 வருடங்களாக நாடக அரங்கியலுக்கான சான்றிதழ் கற்கை நெறியை நடத்தி வருகின்றது.
இக் கற்கைநெறியின் 2022 ஆம் ஆண்டுக்கான புதிய பிரிவில் இணைந்து பயில்வதற்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
நாடகக் கலையில் ஆர்வம் உள்ளவர்களும், நாடகமும் அரங்கியலும் பாடத்தை தரம் 11,12,13 இல் பயிலும் மாணவர்களும் இக் கற்கை நெறியில் இணைந்து கொள்ள முடியும்.
ஆறுமாதங்களைக் கொண்ட இக் கற்கைநெறிக்கான வகுப்புக்கள் சனி,ஞாயிறு தினங்களில் பிற்பகல் 3.30 மணி தொடக்கம் 5.30 மணி வரை நடைபெறும். அத்துடன் போயா தினங்களில் முழுநாள் நாடகப் பட்டறையும் இடம்பெறும்.
இக்கற்கை நெறியில் இணைந்து கொள்ள விரும்புவோர் விண்ணப்பப் படிவங்களை யாழ்.திருமறைக் கலாமன்ற அலுவலகத்தில் பெற்று பூரணப்படுத்தி எதிர்வரும் 22 ஆம் திகதி சனிக்கிழமைக்கு முன்பாக மீள ஒப்படைக்குமாறு வேண்டப்படுகின்றார்கள்.