163
கிளிநொச்சி பூநகரி பிரதேசசபையின் 2022 ஆம் ஆண்டிற்கான பாதீடு 9 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று (06-01-2022) காலை 10 மணியளவில் சபையின் தவிசாளர் சி.சிறீரஞ்சன் தலைமை உரையினை அடுத்து இந்த ஆண்டிற்கான பாதீட்டினை சபைக்கு சமர்ப்பித்தார்.
பாதீடு தொடர்பான விவாதத்தையடுத்து வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. 20 உறுப்பினர்களை கொண்டுள்ள குறித்த சபையில் குறித்த பாதீட்டிற்கு 12 உறுப்பினர்கள் ஆதரவாகவும் மூன்று உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர் 5 உறுப்பினர்கள் சபைக்கு இன்றைய தினம் சமூகமளிக்காதிருந்தநிலையில் பாதீடு 9 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Spread the love