முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் படையினரால் விடுவிக்கப்பட்ட காணி ஒன்றிலிருந்து கைப்பற்றப்பட்ட பாரிய இரண்டு வெடிகுண்டுகளை இரும்பிற்காக கடத்தி செல்லமுற்பட்ட 6 பேரை புதுக்குடியிருப்பு காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.
கடந்த ஜனவரி 4ஆம் திகதி விடுவிக்கப்பட்ட குறித்த காணியில், வேலி அமைப்பதற்காக, சென்றிருந்த நபர் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பாரிய குண்டுகளை இரும்புக்காக விற்பனை செய்வதற்கு எடுத்துச் செல்ல முற்பட்ட போதே கைவேலி பகுதியைச் சேர்ந்த, அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொன்றும் சுமார் 400 கிலோகிராம் நிறை கொண்டவை.
கைது செய்யப்பட்ட அறுவரையும் மாங்குளம் மாவட்ட நீதவான் நீதிமன்றில் இன்று (05) முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக புதுக்குடியிப்பு காவல்துறையினா் தெரிவித்துள்ளனர்.