டென்னிஸ் நட்சத்திரமும் 9 முறை அவுஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான நோவாக் ஜோகோவிச்சின் விசாவை அவுஸ்திரேலிய அரசு ரத்து செய்துள்ளது.
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி எதிா்வரும் 17-ஆம் திகதி மெல்போர்னில் ஆரம்பமாகவுள்ளது. . இந்தப் போட்டியில் பங்கேற்கும் வீரா், வீராங்கனைகள் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என போட்டி அமைப்பு குழுவும், அவுஸ்திரேலிய அரசும் உத்தரவிட்டிருந்தன.
இந்நிலையில் அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் நேற்றிரவு மெல்போர்ன் விமான நிலையம் சென்ற நோவாக் ஜோக்கோவிச் விசா ரத்து செய்யப்பட்டதனால், அவர் விமான நிலையத்திலேயே காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது. மருத்துவப் பரிசோதனைகளுக்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அவரது விசா ரத்து செய்யப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். விசா ரத்து செய்யப்பட்டதால் அவர் மீண்டும் செர்பியா திரும்பியுள்ளாா்.
முன்னதாக நோவா ஜோகோவிச் தனது ருவிட்டர் பக்கத்தில், கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் தனக்கு மருத்துவ விலக்கு கிடைத்துவிட்டதாகக் கூறியிருந்தார். ஆனால், அவுஸ்திரேலிய அரசு இதை எதையும் பரிசீலிக்கவில்லை. தடுப்பூசி மருத்துவச் சான்றிதழ் இல்லாததால் 9 முறை ஆஸி., கிராண்ட்ஸ்லாம் வென்ற செர்பிய வீரர் நோவாக் ஜோகோவிச் விசாவை ரத்து செய்துள்ளது. மருத்துவ விலக்கை அவுஸ்திரேலிய ஓபன் போட்டி ஒருங்கிணைப்பாளர் குழுவின் சிறப்புப் பிரிவு பரிசீலித்து வழங்க வேண்டும். இதற்காக ஜோகோவிச் தரப்பு விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மாரிஸன், “சட்டம் அனைவருக்கும் சமமானதே. சட்டத்திற்கு மேலானோர் யாருமில்லை. எல்லைப் பாதுகாப்பில் சமரசமே இல்லை” எனத் தொிவித்துள்ளாா்.
விசா ரத்து தொடர்பாக அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப் படை விடுத்த அறிக்கையில், அவுஸ்திரேலிய அரசு கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக கோரிய மருத்துவச் சான்றிதழ்களை சமர்ப்பிக்க நோவாக் ஜோகோவிச் தவறிவிட்டார். அதனாலேயே அவரது விசா ரத்து செய்யப்பட்டது எனத் தொிவித்துள்ளது. .
இதேவேளை தங்கள் நாட்டின் டென்னிஸ் நட்சத்திரம் அவமதிக்கப்பட்டுவிட்டதாக செர்பியா நாடு கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது