193
தனுஷ்க குணதிலக, குசல் மென்டிஸ் மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஆகியோருக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை உடனும் அமுலுக்கு வரும் வகையில் நீக்க இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.நேற்று (07) நடைபெற்ற இலங்கை கிரிக்கெட் சபையின் நிறைவேற்றுக்குழு கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் பயோ பபிள் முறைமையை மீறியமைக்காக குறித்த வீரர்கள் மூவருக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு 7 மாதங்களாக தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love