கொரோனா தடுப்பூசி ஆதாரத்தை வழங்காமையினைக் காரணம் காட்டி டென்னிஸ் நட்சத்திரமும் 9 முறை அவுஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான செர்பிய டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சுக்கு அண்மையில் அவுஸ்திரேலிய விசா ரத்து செய்யப்பட்டிருந்தது. எனினும் அவுஸ்திரேலியாவை விட்டு வெளியேறாமல், அங்கேயே தங்கி, ஜோகோவிச் நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தாா். இந்நிலையில், அவுஸ்திரேலிய பெடரல் நீதிமன்றம் அ வுஸ்திரேலிய அதிகாரிகள் எடுத்த முடிவு நியாயமற்றது என தொிவித்து தீா்ப்பு வழங்கியதனையடுத்து தற்போது அவரது விசா ரத்து நிறுத்தப்பட்டுள்ளது
முன்னதாக நோவா ஜோகோவிச் தனது ருவிட்டர் பக்கத்தில், கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் தனக்கு மருத்துவ விலக்கு கிடைத்துவிட்டதாகக் கூறியிருந்தார். ஆனால், அவுஸ்திரேலிய அரசு இதை எதையும் பரிசீலிக்கவில்லை எனத் தொிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது