198
பிறந்து 52 நாள்களேயான சிசு தாய்ப்பால் புரைக்கேறி உயிரிழந்துள்ளது. வட்டுக்கோட்டை சித்தன்கேணியைச் சேர்ந்த சிசுவே உயிரிழந்துள்ளது என்று இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
நேற்று நள்ளிரவு தாய்ப்பால் குடித்துவிட்டு சிசு தூங்கியதாகவும் , இன்று அதிகாலை 3.30 மணியளவில் பார்த்த போது, மூக்கு வழியாக குருதி படிந்து காணப்பட்டதை அடுத்து உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்ட போது , சிசு ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டிருந்தனர் என மரண விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love