174
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 05 தமிழ் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சட்டமா அதிபரின் ஆலோசனையின்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 2019 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட இவர்கள் கொழும்பு மகஸின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இவர்களை விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததாக தொிவிக்கப்பட்டுள்ளது
பளை, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஐவரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love