இலங்கை பிரதான செய்திகள்

வெலிக்கடை சிறைச்சாலை கலவரம் – முன்னாள் ஆணையாளருக்கு மரணதண்டனை

வெலிக்கடை சிறைச்சாலையில் 8 கைதிகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறைச்சாலைகள் முன்னாள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவாவிற்கு கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

எமில் ரஞ்சன் மீதான 4 குற்றச்சாட்டுகளிலிருந்து அவர் விடுவிக்கப்பட்ட போதும் ஒரு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த முன்னாள் காவல்துறை இன்ஸ்பெக்டர் நியோமால் ரங்கஜீவ அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கைதிகள் கொலை தொடர்பில் நியோமால் ரங்கஜீவ மற்றும் எமில் ரஞ்சன் லமாஹேவாவிற்கு எதிராக சட்டமா அதிபரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் மூவர் அடங்கிய விசேட நீதிபதிகள் குழாமினால் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது

2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் 27 கைதிகள் கொல்லப்பட்ட போதிலும், வழக்குத் தாக்கல் செய்வதற்கு சட்டமா அதிபரிடம் 8 கைதிகள் கொல்லப்பட்டமைக்கான ஆதாரங்கள் மட்டுமே கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.