தற்காலத்தில் போகி பண்டிகையின்போது பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், றப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப், ரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவையும் எரிக்கப்பட்டு வருகின்றன.
இதனால் காற்று மாசு ஏற்படுவதோடு, இதில் இருந்து வெளியாகும் நச்சு வாயுக்களால் மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்ற பாதிப்பும் மக்களுக்கு ஏற்படுகிறது.
இந்நிலையில் சென்னையில் போகி பண்டியையின்போது டயர், பிளாஸ்டிக் பொருட்களை மக்கள் எரிக்கக்கூடாது என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.
இவ் விதியை மீறி எரித்தால் 1000ரூபா அபராதம் விதிக்கப்படும் என்றும், இவற்றை அனைத்து பகுதிகளிலும் கண்காணிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழர்களின் திருநாள் என அழைக்கப்படும் பொங்கலுக்கு முதல் நாள் ‘போகி‘ எனப்படும் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகின்றது.
இப்பண்டிகையானது எமது மனதில் உள்ள கெட்ட எண்ணங்கள், தீய குணங்கள் போன்றவற்றை முற்றிலுமாக நீக்கி, புதிய நல்ல எண்ணங்களை கொண்டு வர வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் கொண்டாடப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் இப்பண்டிகையின் போது மக்கள் தமது வீடுகளில் உள்ள பழைய பொருட்களை எரித்து வருகின்றனர். இது தீய எண்ணங்களை எரிப்பதற்கு சமமாகும் என்று நம்பப்படுகிறது.