Home இலங்கை விடுதலைப் புலிகளுக்கும் அங்கொட லொக்காவுக்குமிடையே தொடர்பு

விடுதலைப் புலிகளுக்கும் அங்கொட லொக்காவுக்குமிடையே தொடர்பு

by admin

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் செயற்பாட்டாளரான  சபேசன் உள்ளிட்ட சிலருக்கும்,  இலங்கை நிழல்  உலகதாதா  அங்கொட லொக்காவுக்கும் இடையே  தொடர்பு இருப்பதாக இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன.

இலங்கையைச் சேர்ந்த பிரபல போதைப் பொருள் கடத்தல் மன்னன் அங்கொட லொக்கா கோவையில் தலைமறைவாக இருந்தநிலையில் அண்மையில் திடீர் மாரடைப்பால் உயிாிழந்திருந்தாா். அவரது உடல் போலி ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டு மதுரைக்கு எடுத்து செல்லப்பட்டு  எரியூட்டப்பட்டமை தொடர்பாக அவரது காதலி அமானி தாஞ்சி, மதுரையை சேர்ந்த வழகறிஞர் சிவகாம சுந்தரி, அவரது நண்பர் தியானேஸ்வரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு இது தொடா்பில் தமிழ்நாட்டு  சிபிசிஐடி காவல்துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில் அங்கொடலொக்காவின்  நெருங்கிய கூட்டாளியான சானுகா தனநாயக்கா, ஜெயபால் என்ற இருவரும் பெங்களுரில் தலைமறைவாக இருந்தநிலையில்    கைதாகியுள்ளனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது அங்கொட லொக்காவிற்கும், சானுகா தனநாயக்காவிற்கும் விடுதலை புலிகளின் முன்னாள் உளவுபிரிவை சேர்ந்த சபேசன் உள்ளிட்டவர்களுடன் தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

தொடா்ந்து சிபிசிஐடி காவல்துறையினா் விசாரணை செய்த போது சபேசன், இலங்கையை சேர்ந்த  சின்ன சுரேஷ் , சென்னையைச் சேர்ந்த சௌந்தர்ராஜன்  ஆகியோர் பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களை கடத்தும் போது NIA அமைப்பினரால் கடந்த ஒக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டு கேரள மாநிலம் கொச்சி சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளமை தெரியவந்தது.

இதனையடுத்து சிபிசிஐடி கதவல்துறையினர் சிறையிலுள்ள   சபேசன் உட்பட 3 பேரையும் 3 நாள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்ட போது அதில் அங்கொட லொக்கா மற்றும் சனுக்கா தனநாயக்கா ஆகியோருடன் தொடர்பில் இருந்தது உறுதி செய்யப்பட்டதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இருந்து வெளியேறிய அங்கொட லொக்கா மற்றும் சனுக்க தனநாயக்க ஆகியோர் சபேசன், சின்னசுரேஷ்,,ஜெயபால் ஆகியோர் மூலம் இலங்கைக்கு போதை பொருள் மற்றும் ஆயுதங்கள் கடத்தி வந்திருப்பதும் கோவையை மையமாக வைத்து இந்த வேலைகளை இரகசியமாக செய்து வந்து இருப்பதும் சிபிசிஐடி காவல்துறையினா் விசாரணையில்  தெரியவந்துள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More