215
கிளிநொச்சி மாவட்டம், பளை காவல்துறைப்பிரிவுக்குட்பட்ட முகமாலை பகுதியில் மனித எச்சம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வா்களின் குறித்த பிரிவினரால் மனித எச்சம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இது தொடா்பில் பளை காவல்துறையினருக்கும் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றுக்கும் தகவல் வழங்கப்பட்டதனையடுத்து இன்று (19) அங்கு சென்ற கிளிநொச்சி மாவட்ட நீதவான், அப்பகுதியை பார்வையிட்டுள்ளாா்.
தற்போது நீதவானின் அனுமதியுடன் அப்பகுதியில் மேலும் அடையாளப்படுத்தபட்ட இடங்களில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றன
Spread the love