நாட்டை முடக்குமாறு பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ள போதிலும் நாட்டை முடக்குவது தொடா்பில் எந்தவிதமான தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என சுகாதார சேவைகள் பயணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தொிவித்துள்ளாா்.
நாட்டை முடக்குவது பிரச்சினைக்குத் தீர்வாகாது எனவும் நாடு திறந்திருக்கும் போதே, கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகுவது அதிகரித்தாலும், அந்த நோயாளிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறைவாகும் எனத் தெரிவித்த அவா் தொற்றாளர்களில் 80 சதவீதமானவர்களை வீடுகளில் வைத்தே சிகிச்சையளிக்க கூடியதாக உள்ளது எனவும் கொரோனா வைரஸ் தொற்றுவதன் வேகம் அதிகரித்துள்ளமையால் சகலரும் மிகவும் அவதானமாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று பரவுதல் மிகவேகமாக அதிகரித்துள்ளமையால் சுகாதார தொழிற்சங்கங்கள் உட்பட பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் அரசாங்கம் மற்றும் சுகாதார அமைச்சுக்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது