உலகிலேயே அதிக எலக்ட்ரிக் கார்களைத் தயாரிக்கும் டெஸ்லா நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் டிவிட்டரில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்-ஐ கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இது அமெரிக்க மக்கள் மத்தியில் மட்டும் அல்லாமல் உலக அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அண்மையில் எலக்ட்ரிக் வாகனங்களின் எதிர்காலம் குறித்து ஆலோசனை செய்ய அந்நாட்டின் முன்னணி ஓட்டோமொபைல் நிறுவனங்களின் உயர் அதிகாரிகளை நேரில் அழைத்து ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்பு ஜோ பைடன் தனது ருவிட்டரில் ஜெனரல் மோட்டார்ஸ், போர்ட் போன்ற நிறுவனங்கள் அமெரிக்காவில் எப்போதும் இல்லாத வகையில் அதிகப்படியான எலக்ட்ரிக் கார்களைத் தயாரிக்கிறது எனத் தெரிவித்து இருந்தார்.
ஜோ பைடனின் நிறுவன தலைவர்கள் அழைப்பிலும் டெஸ்லா நிறுவனத்தை நிராகரித்து இருந்ததோடு, ருவிட்டர் பதிவிலும் டெஸ்லா நிறுவனத்தின் பெயரைக் குறிப்பிடவில்லை.
பைடன் ஒரு பொம்மை அதிபர் பைடனின் POTUS ருவிட்டர் கணக்கில் செய்யப்பட்ட பதிவுக்கு எலான் மஸ்க் TESLA என்பதைக் கப்பிற்றல் லெட்டரில் கிண்டலாகப் பதிவிட்டார்.
இதோடு நிற்காத எலான் மஸ்க் அடுத்த ருவீட்டில் பைடன் மனித வடிவில் இருக்கும் ஒரு பொம்மை எனக் குறிப்பிட்டார். குறிப்பாக எலக்ட்ரிக் வாகனங்கள் ஓட்டோமொபைல் துறையின் எதிர்காலம், அதை அமெரிக்காவில் உருவாக்குவது தொடர்பாக பைடன் மற்றும் மேரி பாரா உடன் வெளியிட்ட வீடியோவுக்கு எலான் மஸ்க், பைடன் அமெரிக்க மக்களை முட்டாள்கள் போல் நடத்துகிறார் என நேரடியாகி குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க நிறுவனமான டெஸ்லா இதுவரை 9,36,172 கார்களைத் தயாரித்துள்ளது, ஆனால் ஜெனரல் மோட்டார்ஸ் 24,828 எலக்ட்ரிக் கார்களையும், போர்டு 27,140 எலக்ட்ரிக் கார்களை மட்டுமே தயாரித்துள்ளது. ஆனாலும் டெஸ்லா நிறுவனத்தின் பெயரை பைடன் குறிப்பிடவில்லை என்பது தான் எலான் மஸ்க்-ன் கோபம்.
எலக்ட்ரிக் வாகனங்கள் பெட்ரோல் கார்களுக்கு இணையாக ஏன் பெர்ரோல் கார்களை விடவும் சிறப்பாக இயக்க முடியும் என நிரூபனம் செய்தது டெஸ்லா தான். எலான் மஸ்க் தலைமையில் ஓட்டோமொபைல் தொழில்நுட்பம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. உலக நாடுகள் உலக நாடுகளுக்கு டெஸ்லா நிறுவனத்தையும், அதன் தொழில்நுட்பத்தையும் கண்டு வியந்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதியான ஜோ பைடன் டெஸ்லா பெயரை குறிப்பிடாதது கேள்விகளை எழுப்பியுள்ளது.