துப்பாக்கி சூட்டுக்கிலக்காகிய நிலையில் உயிரிழந்த காவல்துறை விசேட அதிரடிப்படை அதிகாரி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஹப்புத்தளை காவல்துறை விசேடஅதிரடிப்படை முகாமைச் சேர்ந்த அதிகாரி ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
சடலம் தியத்தலாவை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், மரணத்திற்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.