221
கடந்த வியாழக்கிழமை கடற்றொழிலிற்கு சென்றிருந்த நிலையில் காணாமல் போயிருந்த இரு மீனவர்களதும் சடலங்கள் இன்றையதினம் வடமராட்சி கிழக்கு ஆழியவளை கடற்கரையில் கரையொதிங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நான்கு நாட்களாக காணாமல் போனவர்களை தேடும் பணி இடம் பெற்ற நிலையில் இன்று இவ்வாறு கரையொதுங்கிய சடலங்கள் கிளிநொச்சி நீதிபதி முன்நிலையில் அடையாளம் காட்டப்ப்பட்ட பின்னர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டு உறவினர்களிடம் கையளிக்கும் நடவடிக்கைகள் இடம் பெறுவதாக மருதங்கேணி காவல்துறையினா் தொிவித்துள்ளனா்
Spread the love