176
சுகாதார தொழிற்சங்கங்கள் ஏழு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து மேற்கொண்டுள்ள பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தினை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த தொழிற்சங்க நடவடிக்கையை உடனடியாக இடைநிறுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கக் கோரி சட்டமா அதிபர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த நிலையில் வழக்கின் விடயங்களை ஆராய்ந்த நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
சுகாதார தொழிற்சங்கங்கள், நாடளாவிய ரீதியில் முன்னெடுத்துவரும் வேலைநிறுத்தப் போராட்டம், இன்று (10) நான்காவது நாளாகவும் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது
Spread the love