Home இலங்கை சகல பல்கலைக்ககழகப் பணியாளர்களுக்கும், ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம்!

சகல பல்கலைக்ககழகப் பணியாளர்களுக்கும், ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம்!

by admin

நாடு முழுவதிலுமுள்ள ப.மா.ஆ சார்ந்த அரச பல்கலைக்கழகங்களில்-

அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக்குழுவினால் 26.01.2022இல் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு வழங்கப்பட்ட கடிதத்தின் பிரகாரம் மேற்படி அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் இலங்கையில் உள்ள சகல அரச பல்கலைக்கழகங்களிலும் மேற்கொள்ளப்படுகின்றது.


அந்த வகையில் எமது பல்கலைக்கழக ஊழியர் சங்கமும் 2022 பெப்ரவரி 10ம் திகதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளவிருக்கின்றது என்பதனை தங்களிற்கு அறியத்தருகின்றோம்.

மேற்படி 10.02.2022இல் இடம்பெறவுள்ள ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் நாம் பிரதானமாக வலியுறுத்தவுள்ள 2016ம் ஆண்டின் வரவுசெலவுத் திட்டத்தின்படி மேற்கொள்ளப்பட்ட அடிப்படைச் சம்பளத்தின் அதிகரிப்பானது, அரச சேவைப் பணியாளர்களுடன் ஒப்பிடும்போது பேராசிரியர் தரத்தினைத் தவிர்ந்த ஏனைய பல்கலைக்கழகப் பணியாளர்களுக்கு 15மூ குறைவானதாகும். அதனடிப்படையில் இச்சம்பள உயர்வு கோரிக்கையானது பல்கலைக்கழக கல்விசாரா பணியாளர்களுக்கு மட்டுமல்லாது பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கும் பல்கலைக்கழக நிர்வாக உத்தியோகத்தர்களுக்கும் பொதுவானது என்பது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் நீர்வழங்கல் சேவைப் பணியாளர்கள் தவிர்ந்த ஏனைய சகல கல்விசாரா பணியாளர்களையும் இப்போராட்டத்தில் இணைந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம். 10.02.2022 வியாழக்கிழமை காலை 08.30 மணிக்கு வவுனியா பல்கலைக்கழகம் தவிர்ந்த ஏனைய அனைத்து பணியாளர்களையும் இராமநாதன் மண்டப முன்றலில் ஒன்றுகூடுமாறும், தொடர்ந்து இடம்பெறும் விளக்கப் பொதுக் கூட்டத்தில் தவறாது கலந்துகொள்ளுமாறும் கேட்டுக்கொள்வதோடு, வவுனியா பல்கலைக்கழக பணியாளர்களை பம்பைமடு வளாகத்தில்; ஒன்றுகூடுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.

முக்கிய குறிப்புக்கள்:
• அங்கத்தவர்கள் அனைவரும் போராட்ட தினத்தில் ஊழியர் சங்க வருகைப் பதிவேட்டில் தங்களது கையொப்பங்களை இடுதல் கட்டாயமானது என்பதனை தங்களிற்கு அறியத்தருகின்றோம்.

• அனைவரும் உரிய கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை கடைப்பிடிப்பதுடன் சமூக இடைவெளியையும் (இரு நபர்களிற்கிடையிலான குறைந்தபட்ச தூரம் 03 அடி) கடைப்பிடித்தல் அவசியமானதாகும்.

2016/17 இந்த சுற்று நிருபத்தின் பிரகாரம் அரசாங்க ஊழியர்களுக்கு 106-109% அதிகரிப்பும், பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களுக்கு 90-92% அதிகரிக்கப்பட்டுள்ளது. இது அநீதியான அதிகரிப்பு.


(Salary Anomalies) UGC Commission Circular 17/20162016-2020 வரை அரசாங்க ஊழியர்கள் 107% சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டு தற்போது வரை பெற்றுக் கொள்கிறார்கள். ஆனால் பல்கலைக்கழக ஊழியர்களுக்கு 90-92% அதிகரிப்பே வழங்கப்பட்டுள்ளதுடன் 2020 ல் அடிப்படைச் சம்பளத்தில் 15% ஐ பல்கலைக்கழக கல்வி சாரா பணியாளர்கள் இழக்கின்றனர்.

மேற்குறித்த போராட்டமானது இன்று 10.02.2022 யாழ் பல்கலைக்கழகம், வவுனியா பல்கலைக்கழகம் உள்ளிட்ட இலங்கையின் சகல அரச பல்கலைக்கழகங்களிலும் முன்னெடுக்கப்பட்டது.

அந்தவகையில் யாழ் பல்கலைக்கழகத்தில் நடைபெறவிருந்த மாணவர்களுக்கான பரீட்சைகளும், கூட்டங்களும் ஒத்திவைக்கப்பட்டிருந்தன.

முழுமையாக சகல கல்வி சாரா பணியாளர்களும் கடமைக்கு செல்லாது வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர்.

முற்பகல் 11.00 மணிளயவில் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினால் ஊழியர் சங்கப் பொது அறையில் பணியாளர்களுக்கு விளக்கப் கூட்டம் ஒன்று நடாத்தப்பட்டு அதனைத் தொடர்ந்து 11.45 மணியளவில் பல்கலைக்கழக பிரதான வாசலில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

சங்கச் சேவையில்

த.சிவரூபன்
தலைவர்
பல்கலைக்கழக ஊழியர் சங்கம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
10.02.2022.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More