184
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட யாழ் – கரவெட்டியை சேர்ந்த ஒருவர் 12 வருடங்களின் பின்னர் இன்று (15) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டார்.
இறுதி யுத்த காலத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு கொழும்பில் நிதி சேகரித்து வழங்கிய குற்றச்சாட்டின் போில் கடந்த 2010 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19 ஆம் திகதி கைது செய்யப்பட்ட கரவெட்டியை சேர்ந்த 56 வயதான கந்தப்பு ராஜசேகர் என்பவரே இவ்வாறு 12 வருடங்களின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாமையால், அவரை விடுதலை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Spread the love