நாடாளுமன்றத்தில் பணியாற்றுவோரில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. நேற்றுமுன்தினம் (18.02.22) மேலும் மூவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை இனங்காணப்பட்டது.
அதனடிப்படையில், நாடாளுமன்றத்தில் கடந்த வாரத்தில் மட்டுமே கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 100யும் தாண்டியது.
நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் வைத்து மேற்கொள்ளப்பட்ட ரெபிட் அன்டிஜன் பரிசோதனையின் போதே, இந்த எண்மரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியமை இனங்காணப்பட்டது. அன்றையதினம் நாடாளுமன்ற பணியாளர்கள் 30 பேர், அன்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 54 ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.