165
விசேட பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விசேட வரி சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை வாக்குகளுக்கு மேலதிகமாக, பொதுமக்கள் அபிப்பிராயத்தை பெறுதல் அவசியம் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, நாடாளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
இந்த சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை நாடாளுமன்றத்திற்கு இன்று(22.02.22) காலை அறிவிக்கும் போதே சபாநாயகர் இதனை கூறியுள்ளார்.
இந்த சட்டமூலத்திலுள்ள சில சரத்துக்கள் அரசியலயமைப்புக்கு முரணாக காணப்படுவதால் இந்த தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love