மேற்கு ஆபிரிக்காவில் உள்ள புர்கினா பாசோவின் தென்மேற்கு பகுதியில் உள்ள கிராமம் ஒன்றிலுள்ள தற்காலிக தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சுமார் 60 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலா் காயமடைந்துள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வெடி விபத்திற்கு முக்கிய காரணமாக அங்கு வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்களே இருந்ததுதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வெடி விபத்து, அருகே இருந்த மரங்கள் மற்றும் வீடுகள் பாதிக்கப்படும் அளவிற்கு மிக பயங்கரமாக இருந்ததாக உள்ளூர் அதிகாரிகள் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தொிவித்துள்ளனா்.
ஆபிரிக்காவின் மிகப்பெரிய தங்க உற்பத்தியாளர்களில் ஒன்றாக அமைந்துள்ள புர்கினா பாசோவில் உள்ள பல சுரங்கங்கள் சர்வதேச நிறுவனங்களால் நடத்தப்பட்டு வருகின்றன. அத்துடன் அங்கு அனுமதி பெறாத பல சுரங்கங்களும் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.