193
கிழக்கு உக்ரைனின் டொன்பாஸ் பகுதியில் ரஷ்யா இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளும் என ரஷ்ய ஜனாதிபதி விலாதிமிர் புடின் கூறியுள்ளார்.
இதேவேளை, உக்ரைன் இராணுவத்தை ஆயுதங்களைக் கீழே போடுமாறும் “நான் ஒரு இராணுவ நடவடிக்கையின் முடிவை எடுத்துள்ளேன்,” என்றும் அவர் தொலைக்காட்சி உரையில் கூறியுள்ளார்.
உக்ரைனில் இருந்து வரும் அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், உக்ரைனை ஆக்கிரமிக்கும் நோக்கம் ரஷ்யாவுக்கு இல்லை என்றும் அவர் கூறினார்.
இந்த நிலையில் இரத்தக்களரி ஏற்படுமாயின் அதற்கான பொறுப்பு உக்ரேனிய “ஆட்சிக்கு” உள்ளது என்று புடின் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love