200
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 22 தமிழக மீனவர்கள் நேற்று இரவு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை அருகே மீன்பிடித்து கொண்டிருந்த நாகையை சேர்ந்த 22 மீனவர்களை கைது செய்த கடற்படையினர், அவர்களின் இரண்டு விசைப்படகுகளையும் கைப்பற்றினர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் மயிலிட்டி துறைமுகத்திற்கு கடற்படையினர் கொண்டு சென்றுள்ளனர்.
Spread the love