165
ஏழாலை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு அருகில் அநாதவராக காணப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றினை காவல்துறையினா் மீட்டுள்ளனர். குறித்த ஆலயத்திற்கு அருகில் கடந்த வியாழக்கிழமை முதல் மோட்டார் சைக்கிள் ஒன்று அநாதரவான நிலையில் காணப்படுவதாகவும் , சந்தேகத்துக்கு உரிய முறையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாகவும் , சுன்னாகம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்நிலையில் சனிக்கிழமை அவ்விடத்திற்கு சென்ற காவல்துறையினா் மோட்டார் சைக்கிளை மீட்டு , காவல் நிலையம் கொண்டு சென்றதுடன் , மோட்டார் சைக்கிளில் உரிமையாளரை கண்டறிய விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love