
உக்ரைன ரஷ்யா மேற்கொண்டுவரும் தாக்குதலில் இந்திய மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையே ஆறாவது நாளாக போர் இடம்பெற்று வருகின்ற நிலையில் கார்கீவ், கீவ் போன்ற நகரங்களில் ரஷ்யா நடத்தி வரும் கடும் தாக்குதல்களால் அங்குள்ள இந்திய மாணவர்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.
, மாணவர்கள் உட்பட இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையாக ஒப்பரேஷன் கங்கா திட்டத்தை இந்திய மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. எனினும் இந்த போாில் சிக்கி உக்ரைன் கார்கீவ் நகரத்தில் உள்ள மருத்துவ கல்லூரி ஒன்றில் படித்து வந்த கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த நவீன் சேகரப்பா என்கிற மாணவர் உயிரிழந்துள்ளார். இதனை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
Spread the love
Add Comment