மன்னார் மாவட்டத்தில் நிலவி வருகின்ற எரிவாயு தட்டுப்பாட்டினால் அனேகமான உணவகங்கள் மூடப்பட்டுள்ளமையினால் பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒரு வார காலமாக மன்னாரில் எரிவாயு தட்டுப்பாடு நிலவி வந்த நிலையில் இன்றைய தினம் புதன்கிழமை (9) அனேகமான உணவகங்களில் உணவு தயாரிக்க பயன்படுத்தி வந்த எரிவாயு முடிவடைந்த நிலையில் பல உணவகங்கள் மூடப்பட்டு வியாபார நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் வீடுகளில் எரிவாயுவை பயன்படுத்தும் மக்களும் எரிவாயு தட்டுப்பாட்டினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது ஒரு புறம் இருக்க தனியார் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசல் இன்மையால் வாகன உரிமையாளர்கள் பரல்கள் மற்றும் கான்களுடன் எரிபொருள் நிலையங்களில் காத்திருக்கின்றனர்.
அரச எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அரச வாகனங்கள் மற்றும் முப்படையினருக்கு மாத்திரமே டீசல் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.