Home இலங்கை சசிக்கெதிரான வழக்கின் தீர்ப்பு மே 6ஆம் திகதி அறிவிக்கப்படும்

சசிக்கெதிரான வழக்கின் தீர்ப்பு மே 6ஆம் திகதி அறிவிக்கப்படும்

by admin

போலி தகவல்களை வழங்கி இராஜதந்திர கடவுச்சீ்ட்டு பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்சவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு நீதவான் நீதிமன்றம் தொிவித்துள்ளது.

இந்த வழக்கின் தீர்ப்பு இன்று (11) அறிவிக்கப்படவிருந்த இருந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை ​​மே மாதம் 6 ஆம் திகதி வழங்குவதாக கொழும்பு மேலதிக நீதவான் சந்திம லியனகே உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பிரதிவாதியான சசி வீரவன்சவும் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தாா்.

கடந்த ஆட்சிக் காலத்தில் போலி தகவல்களை வழங்கி இராஜதந்திர கடவுச்சீ்டடு பெற்று கொண்டதாக குற்றம் சுமத்தி சசி வீரவன்சவுக்கு எதிராக குற்றப் புலனாய்வு பிரிவினர் வழக்குத் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More