கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் பங்கேற்க இந்திய பக்தர்கள் 80 பேர் ராமேஸ்வரம் மீன் பிடிதுறைமுகத்தில் இருந்து புறப்பட்டுள்ளனர். கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா இன்றும் மற்றும் நாளையும் நடைபெறவுள்ளது.அதில் பங்கேற்க 80 பக்தர்கள் மூன்று விசைப்படகுகள் மற்றும் ஒரு நாட்டுப்படகில் கச்சத்தீவுக்கு புறப்பட்டுள்ளனர்.
இன்று மாலை 5 மணிக்கு கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமாகி தேர் பவனி, பிராத்தனைகள் நடைபெற்று, நாளை காலை இலங்கை இந்திய பங்கு தந்தைகளின் கூட்டு திருப்பலியுடன் திருவிழா நிறைவடையவுள்ளது.