176
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸ, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இன்று(16.03.22) சந்திக்க உள்ளார்.
அத்துடன், இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கரையும் நிதியமைச்சர் இன்று சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிதியமைச்சர் பசில் ராஜபஸ, நேற்றுப் பிற்பகல் இந்தியாவுக்கு பயணமானார். ஒரு பில்லியன் டொலர் கடன் வசதி உடன்படிக்கையில் கையொப்பமிடுவதற்காக அவர் அங்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Spread the love