203
அத்தியாவசிய பொருட்கள் மற்றும் எரிபொருள் விலை யேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் மல்லாகத்திலிருந்து வலி வடக்கு பிரதேச சபை வரை சைக்கிள் பேரணியாகச் சென்று தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம் புதன்கிழமை இடம்பெறவுள்ள நிலையில் தற்போதைய விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக வலிவடக்கு பிரதேச சபையின் சகல பிரதேச சபை உறுப்பினர்களும் சைக்கிளில் பிரதேச சபை அமர்வுக்கு பேரணியாக சென்று எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.
Spread the love