இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜிட் நிவாட் கப்ரால், தனது ஆளுநர் பதவிவிலகவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் கட்டளை மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஸவின் ஆலோசனைக்கு அமையவே அவா் இவ்வாறு பதவிவிலகவுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.
சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுடன் ஜனாதிபதி மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் பின்னரே, ஜனாதிபதி இவ்வாறு கட்டளையிட்டுள்ளார் எனவும் பிரதமர் அதற்கு ஆலோசனை வழங்கியுள்ளார் எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது
மத்திய வங்கியின் ஆளுநர் அஜிட் நிவாட் கப்ராலை நீக்குவது சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளில் ஒன்றாகும் எனவும் , ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காலந்தாழ்த்தாது அவா் பதவி விலகுவது நல்லது எனவும் இல்லையேல் பதவியிலிருந்து நீக்கப்படவேண்டிய நிலைமை ஏற்படுமெனவும் அஜிட் நிவாட் கப்ராலுக்கு, உயர்மட்டத்தினர் அறிவுறுத்தியுள்ளனர் எனவும் செய்திகள் தொிவிக்கின்றன.
இதேவேளை அஜிட் நிவாட் கப்ரால் பதவிவிலகிக்கொண்டதன் பின்னர், அல்லது பதவி நீக்கப்பட்டதன் பின்னர் ஏற்படும் அவரது இடத்துக்கு நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல நியமிக்கப்படக்கூடும் எனவும் தொிவிக்கபட்டுள்ளது
எனினும், ஊடகங்களில் வெளியாகியிருக்கும் இந்த செய்தியை ஜனாதிபதி ஊடகப் பிரிவு மறுத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது